உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு
உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  

உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன.

மேலும், மாஸ்கோ நகரம் முழுவதும் மிகப்பெரும் அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், விளையாட்டு அரங்கம், ரசிகர்கள் ஒன்று கூடும் பகுதிகள், சுற்றுலாத் தளங்கள், போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை போன்ற பெரிய அளிவிலான சர்வதேச நிகழ்ச்சிகள், தீவிரவாதிகளுக்கு கவர்ச்சிகரமான இலக்காக உள்ளன என்று தெரிவித்துள்ளது. 

தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்யுமாறும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும் மாறும் அமெரிக்கர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com