Enable Javscript for better performance
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி 

    By DIN  |   Published on : 24th March 2018 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    APOLLO_PRAKASH_REDDY

    சென்னை: அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை தேனம்பேட்டை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சென்னை தேனம்பேட்டை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    அப்பல்லோவில் முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரெட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai