Enable Javscript for better performance
ஆசை காட்டி அதிமுக எம்.பி மகன் ஏமாற்றியதாக சின்னத்திரை பெண் தொகுப்பாளினி பரபரப்பு புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஆசை காட்டி அதிமுக எம்.பி மகன் ஏமாற்றியதாக சின்னத்திரை பெண் தொகுப்பாளினி பரபரப்பு புகார்

    By DIN  |   Published on : 24th March 2018 12:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    prabalanasarali

    சென்னை: திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக எம்.பி அன்வர் ராஜா மகன் நாசர் அலி மீது வானொலி மற்றும் சின்னத்திரை பெண் தொகுப்பாளினி ரோமினா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்தவர் பிரபலா என்ற ரோமினா. இவர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னை வானொலி நிலையத்தில் தொகுப்பாளராக வேலை செய்கிறேன். சொந்தமாக தொழிலும் செய்து வருகிறேன். 2015-இல் சிறந்த தொழில் முனைவோராக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்து எனக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அந்த நிகழ்ச்சியில், அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி கலந்துகொண்டார். அன்று முதல் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.  சைதாப்பேட்டையில் உள்ள எனது அலுவலகத்துக்கு அடிக்கடி நாசல் அலி வந்து செல்வார். அப்போது தனது திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும் அவரது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக என் மனதைக் கலைக்கும் விதமாகப் பேசினார். எனது கணவர் இறந்துவிட்டார். நான் தனிமையில் இருந்து வந்தநிலையில, என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், நல்ல முறையில் என்னைக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார். 

    இதையடுத்து என்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவருக்காக நான் மதமும் மாறினேன். எனது நகைகளை விற்று அவருக்கு ரூ.50 லட்சம் வரை பணமும், ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகளும் கொடுத்துள்ளேன். இதனிடையே கடந்த 6 மாதமாக அவரின் பேச்சில் பல மாற்றங்கள் தெரியவந்தன. பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது குறித்து கேட்டபோது தரக்குறைவாகப் பேசினார். என்னை அடித்து துன்புறுத்தினார். 

    இதுகுறித்து அவரது தந்தை அன்வர் ராஜா எம்.பி.யிடமும் முறையிட்டேன். அவர் சமாதானம் செய்தார். இந்நிலையில், அன்வர் ராஜா எம்பி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார்.

    இந்நிலையில், 2015 முதல் என்னுடன் வாழ்க்கை நடத்தி வந்த நாசர் அலி, வேறோரு பெண்ணை நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச்25) திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். முதலில் வேறு பெண்ணை மணந்து அதன் பின் என் வாழ்க்கையை சீரழித்து, தற்போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ள நாசர் அலியின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். திருமணத்தை தடுத்து நிறுத்துவதோடு, நாசர் அலி மற்றும் அவரது தந்தை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    புகார் மனுவுடன் நாசர் அலியோடு அவர் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் ஆதாரங்களாக கொடுத்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai