Enable Javscript for better performance
சர்ச்சைகளுக்கு இடையே லிங்காயத்து சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் அங்கீகாரம் வழங்கியது கர்நாடக அரசு- Dinamani

சுடச்சுட

    

    சர்ச்சைகளுக்கு இடையே லிங்காயத்து சமுதாயத்துக்கு சிறுபான்மையினர் அங்கீகாரம் வழங்கியது கர்நாடக அரசு

    By DIN  |   Published on : 24th March 2018 11:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Siddaramaiah_oct10

    Siddaramaiah

    பெங்களூரு: சர்ச்சைகளுக்கு இடையே லிங்காயத்து சமுதாயத்துக்கு சிறுபான்மை அங்கீகாரம் வழங்கியுள்ளது கர்நாடக அரசு.

    பசவண்ணரின் தத்துவங்களைப் பின்பற்றும் லிங்காயத்து மற்றும் வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினருக்கு தனிமத அங்கீகாரம் வழங்குவதோடு, அம்மதத்தை சிறுபான்மையினராக அங்கீகாரமளிக்க கர்நாடக அமைச்சரவை மார்ச் 19-ஆம் தேதி தீர்மானம் மேற்கொண்டது. 

    நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான அறிஞர் குழு அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் லிங்காயத்து சமுதாயத்துக்கு மதச்சிறுபான்மையினராக அங்கீகாரம் வழங்க கர்நாடக மொழிச் சிறுபான்மையினர் ஆணையம், கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. மாநில அரசின் இந்த முடிவு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில், வீர சைவர்கள் ஏற்க மறுத்து வரும் நிலையில், லிங்காயத்து சமுதாயத்துக்கு கர்நாடக அமைச்சரவை சிறுபான்மை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

    லிங்காயத்து சமுதாயம் பிரிக்கப்படும் பட்சத்தில் அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு இருக்காது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக அரசின் முடிவு குறித்து நேற்று வெள்ளிக்கிழமை விவாதித்த வீர சைவ மகாசபை, கர்நாடக அரசின் முடிவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் லிங்காயத்து மற்றும் வீரசைவர் சமுதாயத்தினர் ஒன்றுதான்.

    எனவே, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்த முடிவு சரியல்ல. இந்தமுடிவை கடுமையாக எதிர்ப்போம். மதச் சிறுபான்மையினராக அங்கீகரிக்க பரிந்துரைத்திருக்கும் வாசகத்தில் லிங்காயத்து/வீரசைவர் என்று இருக்க வேண்டும். மாறாக, பசவண்ணரின் தத்துவங்களை ஏற்கும் லிங்காயத்து மற்றும் வீரசைவ லிங்காயத்து என்று அரசு கூறியிருப்பதை ஏற்கமுடியாது என தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai