Enable Javscript for better performance
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- Dinamani

சுடச்சுட

    
    army

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கின் டோரூ என்ற இடத்தில் நேற்று இரவு எல்லை தாண்டி நுழைய முயன்ற பயங்கரவாதிகள். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில், 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். 

    மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai