Enable Javscript for better performance
திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.36 லட்சம் தங்கம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.36 லட்சம் தங்கம் பறிமுதல்

    By DIN  |   Published on : 24th March 2018 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gold

    திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாம்பூரிலிருந்து வந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் மதுரையை சேர்ந்த பயணியிடம் ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோலாம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டபோது, மதுரையை சேர்ந்த மீரா மொய்தீன் என்ற பயணி கொண்டு வந்த உடமைகளில் முறையாக சுங்கம் செலுத்தாத ரூ 3.35 லட்சம் மதிப்புள்ள 108 கிராம் தங்கம் நகைகள் இருந்தன. இந்த நகைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து மீரா மொய்தீனிடம் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai