Enable Javscript for better performance
அன்புமணி ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    
    anbumani

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறி சகிப்புத் தன்மையை போதித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறித்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிரியிடத்திலும் அன்பு காட்டு, தவறு செய்தவர்களை மன்னித்து அருள வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட இயேசுபிரான் போதித்த கொள்கைகள் அனைத்தும் உயர்வானவை, உன்னதமானவை ஆகும். அவற்றை பின்பற்றி நடந்தாலே உலகில் துரோகம், மோதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட எந்த தீமைக்கும் தேவை இருக்காது. இயேசுபிரானின் போதனைகளை மதிக்கத் தவறியதே உலகில் அனைத்து மோதல்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம், எதிரிக்கும் உதவும் குணம், நல்லிணக்கம் ஆகியவற்றை பெருக்க இயேசுவின் போதனைகளை பின்பற்ற இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai