Enable Javscript for better performance
காவிரி விவ: மத்திய அரசு மீது இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: மத்திய அரசு மீது இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    By DIN  |   Published on : 31st March 2018 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    secretariate

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைந்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை காலை தாக்கல் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் வியாழக்கிழமை (29-03-2018) அன்று நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு, நிலைப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai