Enable Javscript for better performance
சசிகலாவுடன் கே.என்.நேரு சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    
    kn-nehru

    கணவர் நடராஜன் இறந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா 15 நாள் பரோலில் வந்தார். கணவரின் இறுதிச்சடங்கு முடிந்தபிறகு தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் சசிகலவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

    பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, இன்று பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ள நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சசிகலாவை இன்று காலை சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நடராஜனின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக சசிகலாவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai