Enable Javscript for better performance
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 02:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cbse

    சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 26ம் தேதி நடந்த 12ம் வகுப்பு பொருளாதார தேர்வுக்கான வினாத்தாள் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்கூட்டியே வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    அதேபோல் 28ம் தேதி நடந்த 10ம் வகுப்புக்கான கணிதத் தேர்வின் வினாத்தாளும் தில்லியில் சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 12ம் வகுப்பு பொருளாதாரம், 10ம் வகுப்பு கணிதம் பாடங்களுக்கான தேர்வு மீண்டும் நடத்தப்படும் சிபிஎஸ்இ வாரியம் அறிவித்தது.

    இதைதொடர்ந்து இன்று போலீஸார் சிறுவர்கள் 9 பேர் மீது சிறார் சீர்திருத்த பிரிவு அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 12 பேரை ஜார்கண்ட்டில் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai