Enable Javscript for better performance
மத்திய அரசு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு

    By DIN  |   Published on : 31st March 2018 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamil-nadu-secretariat-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைந்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று காலை தாக்கல் செய்தது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்து. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு, நிலைப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, தமிழக அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

    மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அனைத்து வகையிலும் நாங்கள் ஒத்துழைப்புக் கொடுத்து வந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளுக்கும் இது வரை வெற்றியும் கிடைக்கவில்லை. 

    இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai