Enable Javscript for better performance
ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொருளாதார தேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடத்தப்படும்- Dinamani

சுடச்சுட

    

    ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொருளாதார தேர்வு ஏப்ரல் 25ம் தேதி நடத்தப்படும்

    By DIN  |   Published on : 31st March 2018 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cbse

    சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின.  இதில் பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின.

    முதலில்  திட்டவட்டமாக மறுத்து வந்த சிபிஎஸ்இ வாரியம், அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டபோது பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பின்னர், +2 வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்டது. அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

    வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளாதார தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai