Enable Javscript for better performance
வருமான வரி தாக்கல் செய்வதை முன்னிட்டு ஏதுவாக வங்கிகள் இன்று எட்டு மணி வரை செயல்படும்- Dinamani

சுடச்சுட

    

    வருமான வரி தாக்கல் செய்வதை முன்னிட்டு ஏதுவாக வங்கிகள் இன்று எட்டு மணி வரை செயல்படும்

    By DIN  |   Published on : 31st March 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    incometax

    விடுமுறை நாள்களான மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகளிலும் வருமானவரி அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

    மேலும் 2016-17 மற்றும் 2017-18-ஆம் ஆண்டுகளுக்கான தாமதிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு மற்றும் 2016-17-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கு ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான கடைசி இன்று ஆகும். 

    இந்நிலையில் மார்ச் 29, 30 ஆகிய தேதிகளும் விடுமுறை நாள்களாகும். இருப்பினும் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யவும், அதனுடன் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றவும் வசதியாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்பட்டது.  வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் மீது அடுத்த 3 மாதங்களில் சட்ட ரீதியாக விசாரித்து, வட்டி அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் வருமான வரியை மார்ச் 31ஆம் தேதி வங்கிகளில் செலுத்த வாடிக்கையாளர்களின் வசதிக்காக இன்று இரவு எட்டு மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.  இதுதவிர, இணையதளம் வழியாகவும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai