கர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம்-காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது: பிரதமர் மோடி

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே 12- ம் தேதி நடக்க உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக
கர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம்-காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது: பிரதமர் மோடி

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே 12- ம் தேதி நடக்க உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.  பிரதமர் மோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு கலபுரகியிலும், மதியம் 3 மணிக்கு பல்லாரியிலும், மாலை 6 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். இன்று கலபுரகியில் பேசிய அவர் தில்லியில் ஒரு மெழுகுவர்த்தி அணிவகுத்துச் சென்ற காங்கிரஸ் மக்களை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். தலித் பெண் பிதர் சித்திரவதை செய்யப்பட்டபோது உங்கள் மெழுகுவர்த்திகள் எங்கே இருந்தன? கடந்த தேர்தல்களில், மல்லிகார்ஜுன் கார்கேவை முதல்வராக்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தது. இது அப்பட்டமான சாதி அரசியல் அல்லாமல் வேறு என்ன..? 

விவசாயிகள் நலனில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது. கர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம்; காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது. காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவையே மக்கள் விரும்புகின்றனர் என்று பேசினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com