Enable Javscript for better performance
கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

    By DIN  |   Published on : 18th May 2018 05:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thirunavukasu

    மத்திய அரசு அரசியல் சட்டத்தை மிதித்து குழி தோண்டி புதைக்கிற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகவில் பெரும்பான்மை இல்லாமால் ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவை கண்டித்தும், அதற்கு வழி வகுத்து கொடுத்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்தும் மதுரை அண்ணா நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உட்பட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கர்நாட்காவில் பாஜக, மற்ற கட்சிகளை உடைக்க முயற்சி எடுத்து வருவதா குற்றம்சாட்டினார். இதற்காக பல கோடி ரூபாய் வரை குதிரை பேரம் நடைபெறுவதாக தெரிவித்த அவர், குதிரை பேரத்தில் மத்திய அரசும், அதற்கு ஆளுநர் துணைபோவதாகவும் புகார் கூறினார்.

    இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai