மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு:  அமெரிக்கா அறிவிப்பு

 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்டிருந்த குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி (5 மில்லியன் டாலர்)
மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு:  அமெரிக்கா அறிவிப்பு


வாஷிங்டன்:  2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்டிருந்த குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி (5 மில்லியன் டாலர்) பரிசு என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் கடந்த 2008ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்தது. இதனால் 2008ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் மூள்வது தவிர்க்கப்பட்டது. 

மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் புலனாய்வு தகவலை இந்தியாவிடமும், பாகிஸ்தானிடமும் அளித்து, அமைதி ஏற்படுவதற்கு உதவியது. இந்த வாக்குறுதியை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

இந்நிலையில், மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இது தொடர்பாக கடந்த இருவாரங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியாக தகவல் வெளியானது.  

இதனிடையே அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹுசேன் ஹக்கானி கூறுகையில், "இந்தியாவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு, அந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பிருப்பது நிரூபணமானால், அடுத்து நடக்கும் சம்பவத்தை (போரை) எப்படி கட்டுப்படுத்துவது என்பதை யாராலும் சிந்தித்து பார்க்கக் கூட முடியாது என்றார். 

அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் பதவி வகித்தபோது அவரது தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்காசிய விவகாரத்துறை இயக்குநராக பணியாற்றிய அனிஷ் கோயல் கூறுகையில், இந்தியாவில் மும்பை தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், மிகப்பெரிய போருக்கு அது காரணமாகிவிடும். இந்தியாவில் தற்போது ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பாகிஸ்தானில் துல்லியத் தாக்குதலை நடத்தி, கடின நிலைப்பாட்டை ஏற்கெனவே எடுத்துவிட்டது என்றார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின், நீதிக்கான வெகுமதிகள் திட்டத்தின் கீழ், மும்பை தாக்குதலுக்கு சதி செய்த, அதில் ஈடுபட்ட மற்றும் தாக்குதலுக்கு உதவியவர்களை உலகின் எந்த மூலையிலும் கைது செய்யவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு உதவும் வகையிலோ தகவல் அளிப்போருக்கு ரூ.35 கோடி (5 மில்லியன் டாலர்கள்) பரிசாக அளிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

குற்றவாளிகளை நீதிக்கு முன்பு கொண்டு வருவதற்கு சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான அனைத்துவிதமான உதவிகளும் வழங்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தலைவர்களான ஹபீஸ் சயீத் மற்றும் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு தேவையான தகவல்களை வழங்கினால் தலா 10 மில்லியன் டாலர்கள் மற்றும் 2 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com