இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்!

பழம்பெரும் பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி(91), மும்பையில் இன்று காலமானார்.
இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்!

மும்பை: பழம்பெரும் பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி(91), மும்பையில் இன்று காலமானார்.

மத்திய பிரதேச மாநிலம், மைகார் நகரில் உஸ்தாத் பாபா அலாவுதீன் கான்-மதீனா பேகம் தம்பதியினருக்கு 1927-இல் 4வது மகளாக பிறந்தவர் அன்னபூர்ணா தேவி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ரோஷனரா கான். 4 வயதிலேயே இசை கற்க தொடங்கிய இவர், இந்த துறையில் பிரபலமானார். தனது 14 வயதில், பிரபல கிதார் இசை கலைஞர் ரவிசங்கரை திருமணம் செய்துகொண்டார். அன்று முதல் அன்னப்பூர்ணா தேவி என அழைக்கப்பட்ட இவருக்கு சுபேந்திரா சங்கர் என்ற மகன் இருந்தார். இவர் 1992-இல் காலமானார். 

ரவிசங்கரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அன்னப்பூர்ணா தேவி, பின்னர் ருஷிகுமார் பாண்டியா என்பவரை மணந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு இசைக்கலைஞர்களிடயே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மறைந்த அன்னப்பூர்ணா தேவி, பத்ம பூஷன் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரது சகோதரர் தான் பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் அலி அக்பர் கான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com