நாளை தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், நாளை 4ஆம் கட்ட வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முகாம்
நாளை தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு சிறப்பு முகாம்


சென்னை: தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், நாளை 4ஆம் கட்ட வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடைபெறுகிறது.

செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயதை அடைவோர், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 3 கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், நாளை நான்காவது கட்டமாக, 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

மேலும், www.elections.tn.gov.in மற்றும் nvsp.in  ஆகிய இணையதளங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com