​நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் வரி 4% குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல்,
​நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் வரி 4% குறைப்பு


ஜெய்ப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதமாக குறைந்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்துகொள்ளும் முறை அமலுக்கு வந்தது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வைச் சந்தித்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று திங்கள்கிழமை (செப்.10) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதம் குறைப்பதாகவும், இது மாநில மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான நிவாரணம் இருக்கும் என்று ராவட்சர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்.9) நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்தார்.

இதையடுத்து பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 22 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தான் அரசின் இந்த அறிவிப்பால் அரசிற்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி அறிவித்த நாடு தழுவிய போராட்டம் பொதுமக்கள் ஆதரவை பெற்ற பின்னரே, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com