அதிமுகவை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்னும் யாரும் பிறக்கவில்லை: முதல்வர் பழனிசாமி

அதிமுகவை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்னும் யாரும் பிறக்கவில்லை என முதல்வர் பழனிசாமி பேசினார். 
அதிமுகவை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்னும் யாரும் பிறக்கவில்லை: முதல்வர் பழனிசாமி


காஞ்சிபுரம்: அதிமுகவை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்னும் யாரும் பிறக்கவில்லை என முதல்வர் பழனிசாமி பேசினார். 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அதிமுகவின் பலத்தை எதிர்க்கட்சியினருக்கு காட்டுவோம்.  காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

அமைதி பூங்காவான தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். 2007-ஆம் ஆண்டு திமுக நினைத்து இருந்தால் அப்போதே காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருக்கும். எம்.பி பதவி வேண்டும் என்ற காரணத்திற்காக காவிரி நீர் பிரச்னையை கோட்டை விட்டது திமுக. தன் குடும்பத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டது. திமுக நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளவில்லை.

திமுகவின் தலைமை பதவியில் உள்ளோர் அதிகார போதையில் உள்ளனர். குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே தொடர்ச்சியாக தலைமை பதவிக்கு வர முடியும். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுதே பொது சொத்துகளை சேதப்படுத்தி வருகிறார்கள், ஆளுங்கட்சியாக வந்தால் நிலைமை மோசமாகிவிடும். அதிமுகவை அழிக்கவோ, ஒழிக்கவோ இன்னும் யாரும் பிறக்கவில்லை என்றார்.  

காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் ரூ.38 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.  தமிழகத்தில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பயணநேரம் 11 நிமிடத்திலிருந்து 8 நிமிடமாக குறைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

தமிழகம் சுகாதாரத்துறையில் 2030-இல் எட்டவேண்டிய இலக்கை 2018-ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டதாகவும், தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் தான் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருவதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com