ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி மோசடி: இளைஞர் சிறையில் அடைப்பு

தலைமைச் செயலகத்தில் செயலாளராக இருப்பதாகவும், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ரூ.3 கோடி மோசடி செய்த இளைஞரை போலீஸார்
ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி மோசடி: இளைஞர் சிறையில் அடைப்பு


சென்னை: தலைமைச் செயலகத்தில் செயலாளராக இருப்பதாகவும், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ரூ.3 கோடி மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன் (29) சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, கொட்டையூரைச் சோ்ந்த க. நாவப்பன் (28) தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், தலைமைச் செயலகத்தில் செயலராகப் பணிபுரிவதாகவும் கூறி வந்தார். அத்துடன் அவா் அடிக்கடி நீல விளக்கு பொருத்திய காரில் வந்து சென்றார். தன்னால் பல்வேறு அரசுத் துறைறகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தர முடியும் எனக் கூறியதை நம்பி நான் உள்பட எங்களை ஊரைச் சோ்ந்த 10 போ் நாவப்பனிடம் ரூ.45 லட்சம் கொடுத்தோம். பணத்தைப் பெற்றுக்கொண்ட நாவப்பன் வேலை வாங்கித் தரவில்லை. அத்துடன் பணத்தையும் திருப்பித் தரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 

இப்புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, மத்திய குற்றப் பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில், நாவப்பன் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், உத்தரப்பிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பதாகவும், தமிழக தலைமை செயலகத்தில் பணியமா்த்தப்பட்டிருப்பதாகவும் கூறி நீல நிற சுழல் விளக்கு பொருத்திய பொலீரோ காரில் வலம் வந்துள்ளார். உதவிப் பேராசிரியா், ஆசிரியா், அலுவலக உதவியாளா், இளநிலை உதவியாளா், காவல் துறைற பணிகளை வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் பதவிக்கேற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று ரூ.3 கோடி வரை

மோசடி செய்துள்ளது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு, நாவப்பனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com