சிம்லா அருகே ஜீப் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து: 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

சிம்லா அருகே ஜீப் ஒன்று பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
சிம்லா அருகே ஜீப் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து: 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

புதுதில்லி: சிம்லா அருகே ஜீப் ஒன்று பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா அருகே ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் படுகாயமைடைந்த குழந்தை உட்பட 3 பேர் ரோகூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இந்த விபத்தானது குட்டுவிலிருந்து டியூனீ செல்லும் வழியில் 3 கிலோ மீட்டர் ஸ்னைல் என்ற இடத்தில் நடந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து சிம்லா காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். 

கடந்த மாதம், குல்லு மாவட்டத்தில் ராணி நல்லாவில் நடந்த கார் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு முந்தைய ஒரு விபத்தில், மும்பையில் இருந்து சுமார் 175 கிமீ தூரத்தில் போலந்துப்பூர் அருகே ஒரு ஆழமான பள்ளத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் 34 பேர் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பல்கலைக்கழக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com