மதுரை திருக்கல்யாண விருந்து: சித்திரைத் திருவிழா - 17

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது.
மதுரை திருக்கல்யாண விருந்து: சித்திரைத் திருவிழா - 17

 
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். இப்போது தான் கூடுவாஞ்சேரியில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் கண்டோம். இன்னும் அந்த அருள் நிலை மனதுள் ஊஞ்சலாடுகிறது. மக்கள் கூட்டத்தில் சொல்லவே முடியவில்லை. இங்கேயே இப்படி கூட்டம் என்றால் மதுரை அரசாளும் மீனட்சி அம்மனின் திருக்கல்யாணம் என்றால் கூட்டம் எப்படி இருக்கும்? திருக்கல்யாணம் எப்படி இருக்கும் ? என்று நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்த பதிவில் சித்திரைத் திருவிழா பற்றி சிறிது கண்டு, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து பற்றி செய்திகளை தர குருவருளும்,திருவருளும் நம்மை கூட்டுவித்துள்ளது.
 
சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். சித்திரை திருவிழா பல ஊர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது, குறிப்பாக மதுரை, மானாமதுரை,பரமக்குடி, வீரபாண்டி என சொல்லலாம்.இருப்பினும் சித்திரைத் திருவிழா என்றாலே மதுரை தான். 


 
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.
 
இந்த சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து

சோலைமலை முருகன் கோயிலில் 40 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.18 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா" என்று கேட்டபோது, திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்துஅளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

10 ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காவல்துறை தடைவிதித்தனர்.
 
இந்தாணடு திருக்கல்யாணம் 17-04-2018 அன்று   நடக்கிறது. இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது. இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம், வடை, கல்கண்டு சாதம், எலுமிச்சைச்சாதம், தக்காளிச்சாதம், சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தட்டில் வழங்கப்படும்.

16-04-2019 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது, மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி, பொங்கல், வடை இடம்பெறும்.
  
விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.
 
திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.  

"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை "  Regd.No 32/16
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009 , Shop: 0452 2345601.
chamundihari@gmail.com

அனைவரும் வருக ! அன்னையின் அருள் பெறுக !!​

ராகேஷ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com