சுடச்சுட

  

  சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்

  By DIN  |   Published on : 17th April 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  meenakshi_sundarar

   

  மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். 

  இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது. 

  விழாவின் தொடர்ச்சியாக விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. இதனையடுத்து மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நாளை  நடைபெற இருக்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai