ஆண்டிப்பட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 17th April 2019 08:39 AM | Last Updated : 17th April 2019 08:55 AM | அ+அ அ- |

தேனி: அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அ.ம.மு.க. அலுவலகத்தில் போலீஸார் நேற்று இரவு முதல் சோதனை நடத்தினர். அப்போது அவர்களை உள்ளே அனுமதிக்காமல் அமமுகவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அங்குள்ள அ.ம.மு.க. தொண்டர்களை விரட்டினர். இந்த சம்பவத்தால் நேற்று தேனியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை அதிகாலை முடிவுக்கு வந்த நிலையில், ரூ.1.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அ.ம.மு.க. சேர்ந்த 150 பேர் மீது போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...