சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். 

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது. 

விழாவின் தொடர்ச்சியாக விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. இதனையடுத்து மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நாளை  நடைபெற இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com