தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் சித்திரைத் திருவிழா காரணமாக, இரவு 8 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைகிறது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடையந்தது.

39 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. 

அத்துடன் புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் சுதந்திரமான,  அமைதியான வாக்குப் பதிவை உறுதி செய்திட துணை ராணுவப் படையினரும், காவல் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக 160 கம்பெனி துணை ராணுவப் படைப் பிரிவுகளும், 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com