இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி: இந்திய ராணுவம் குற்றச்சாட்டு 

காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆயுதங்களை அளித்து உதவி செய்து வருவதாக இந்திய ராணுவம்
இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி: இந்திய ராணுவம் குற்றச்சாட்டு 


புதுதில்லி: காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆயுதங்களை அளித்து உதவி செய்து வருவதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது 

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் ஆசார், சல்மா, பெஷாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் என 15 பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவிற்குள் நுழைய தயார் நிலையில் இருப்பதாகவும், அவர்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது.  

இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

காஷ்மீரின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேறவும்,  பாதுகாப்பு காரணங்களுக்காக கல்லூரி மாணவர்கள் உடனடியாக தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் பரபரப்பு குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் கொத்துக்குண்டு வீசுவதாக கூறுவது பொய், ஆதாரமற்றது. கொத்துக்குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்துவதாக பொய்யை பரப்புகிறது பாகிஸ்தான் ராணுவம்.

இந்தியாவுடனான போர்கள் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை வெல்லத் தவறியதால் காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவதற்கு பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அவர்களுக்கு ஏராளமான ஆயுதங்களையும், துப்பாக்கியையும் அளித்து உதவி செய்து வருவதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.  பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் எடுத்து வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் இரு நாடுகளும் சுதந்திர நாடுகளாக உருவெடுத்த 1947 முதல் இரு நாடுகளும் நான்கு போர்களை நடத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com