நாகசாகி, ஹிரோஷிமாவுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்: வைகோவுக்கு தமிழிசை எச்சரிக்கை

தமிழகத்தை நாகசாகி, ஹிரோஷிமாவுடன் ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என வைகோவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை
நாகசாகி, ஹிரோஷிமாவுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்: வைகோவுக்கு தமிழிசை எச்சரிக்கை


சென்னை: தமிழகத்தை நாகசாகி, ஹிரோஷிமாவுடன் ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என வைகோவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

நியூட்ரினோ திட்டத்திற்காக சுரங்கம் தோண்டும் போது கேரள மாநிலத்தின் இடுக்கி அணை உடையக் காரணமாகிவிடும். மேலும், தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கும் முல்லைப் பெரியாறு அணையும் உடையும் அபாயம் உள்ளது.

இந்த நியூட்ரினோ திட்டமானது, அமெரிக்காவில் உள்ள பெர்னி என்ற ஆய்வுக் கூடத்துடன் இணைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வகத்தில் அணுக் கழிவுகளை வைத்துப் பாதுகாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை நான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது, அது எழுத்துப் பிழை என்று மத்திய அரசு கூறியது. இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து வாதாடினேன். 

அப்போது, இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற, மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினேன். ஆகவே, 2015, மார்ச் 22-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்துள்ளது. 

மேலும், பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தடை ஆணை பெற்றுள்ளது.

இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, அணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும். ஆகவே, தமிழகம் நாகசாகி, ஹிரோஷிமா போல ஆபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. கேரள மாநில முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி ஆகியோர் இத்திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். எனவே, நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடுமாறு மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். 

இதையே, இன்று சனிக்கிழமை வேலூர் தொகுதியில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வைகோ பேசுகையிலும் தெரிவித்தார். 

இந்நிலையில், சென்னையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது, நாகசாகி, ஹிரோஷிமா தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும்.

வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை, பாமர மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com