வேலூரில் இதுவரை ரூ 3.57 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாஹூ 

வேலூர் மக்களவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதாக இதுவரை ரூ 3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை
வேலூரில் இதுவரை ரூ 3.57 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாஹூ 


வேலூர் மக்களவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதாக இதுவரை ரூ 3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இத்தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணி வேட்பாளரை ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் தலைமையில் 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டதுடன், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் களமிறக்கப்பட்டு, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதுதவிர, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா 3 நாள்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக மாநில மகளிரணிச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 5 நாள்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அத்துடன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ஸ்ரீவல்லபிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். 

இதுதவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 3 நாள்கள் பிரசாரம் மேற்கொண்டார்.  அதன்படி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 

பிரசார இறுதிநாளையொட்டி, அதிமுக கூட்டணி வேட்பாளரை ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக அமைச்சர்களும்,  திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன் ஆகியோர் வேலூரில் இன்று சனிக்கிழமை இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். 

பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ததை அடுத்து வெளியூர் நபர்கள் யாரும் தொகுதிக்குள் தங்கியிருக்கக் கூடாது என்று மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றதாக இதுவரை ரூ 3.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

அதாவது, ரூ.89 லட்சம் மதிப்பிலான 2.89 கிலோ தங்கம், ரூ.5.7 லட்சம் மதிப்பிலான 13.8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், வேலூர் தொகுதி முழுவதும் 3,957 காவல் துறையினர், 1,600 மத்திய ஆயுதப்படை காவலர்கள், 400 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளாதகவும் சத்யபிரதா சாஹூ கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com