முதுகெலும்பு இல்லாத கட்சி திமுக: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தான் முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவத்தார்.
முதுகெலும்பு இல்லாத கட்சி திமுக: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தான் முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவத்தார்.

மக்களவையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடர்புடைய மசோதாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக ஆதரவு தெரிவித்தது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் அமைப்பதற்கான மசோதா ஆகியவற்றின் மீதான விவாதம் மாநிலங்களவையிலும் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக  உறுப்பினர் டி.ஆர். பாலு பேசுகையில், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்தத் தீர்மானமும், மசோதாவும் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தற்போது அங்கு இல்லை என அரசு கூறினாலும், அங்கு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அந்த மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படவில்லை. சட்டப்பேரவை இருக்கும் போதுதான் மக்களின் உண்மையான விருப்பம் பிரதிபலிக்கப்படும். அரசியலமைப்பின்படி இது சரி என்று நீங்கள் கூறலாம். மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதாக்களை இரு அவையிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கிவிட முடியும். நாடாளுமன்றத்தில் தினமும் இரண்டு மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதுவே ஜனநாயக முறைப்படி, காஷ்மீர் சட்டப்பேரவை அமைந்ததும் செய்யலாமே? நீங்கள் ஜனநாயக முறைப்படி நடந்து கொண்டிருந்தால், காஷ்மீர் மக்களே உங்களுக்கு வாக்களித்து சட்டப்பேரவையில் அமர வைத்திருப்பார்கள். எல்லா இடத்திலும் பெரும்பான்மையான வெற்றி பெறும் உங்களால் தமிழகத்திலோ கேரளாவிலோ வெற்றி பெற முடியவில்லை ஏன்? அதைப் பற்றி யோசித்து இருக்கிறீர்களா?. உங்களால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாததற்கு காரணம், அறிவார்ந்த மக்கள் உங்களுடன் இல்லை. தமிழக மக்கள் எப்போதும் பாஜவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இரு அவைகளிலும் ஏறக்குறைய 30-35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காஷ்மீர் மசோதா கொண்டு வந்ததன் மூலம் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள். இதன் இறுதி முடிவு என்ன? மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்பது இரு மாநகராட்சிகளை உருவாக்குவது போன்றதாகும் என்று பேசிக் கொண்டிருந்தபோது, பாஜக உறுப்பினர்களுடன் சேர்ந்து தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.ஆர்.பாலுக்கு ஆதரவாக கனிமொழியும் குரல் கொடுத்தார். உடனே தன பேச்சை தொடர்ந்த பாலு, ‘‘முதுகெலும்பு உள்ளவர்களுக்குதான் மக்களவை. உட்காருங்கள்’’ என்று ரவீந்திரநாத்தை பார்த்து கூறினார். 

பின்னர் சபாநாயகர் அனுமதி அளித்ததும் தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, ‘‘எனக்கு முதுகெலும்பு உள்ளதால் பேச அனுமதி தந்துள்ளனர். முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு அனுமதி தரவில்லை,’’ என்றும் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள துணைநிலை ஆளுநர்கள், இணைச் செயலர்கள் அந்தஸ்தில் இருக்கப் போகிறார்கள். அங்கு சட்டத்தின் ஆட்சி இருக்குமா? அதனால், இந்த மசோதாவை என்னால் ஆதரிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சத்தீவை மீட்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தான் முதுகெலும்பு இல்லாமல் செயல்பட்டதாகவும் கச்சத்தீவை திமுக தான் இலங்கைக்கு தாரை வார்த்தது என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com