வேலூர் மக்களவைத் தேர்தல்: ஏ.சி. சண்முகம் 4,402 வாக்குகள் பெற்று முன்னிலை
By DIN | Published On : 09th August 2019 08:32 AM | Last Updated : 09th August 2019 08:32 AM | அ+அ அ- |

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று வரும் வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை இருந்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி ஆம்பூர் பேரவைத் தொகுதியில்
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4,402 வாக்குகளும், கே.வி.குப்பம் பேரவைத் தொகுதியில் 1,177 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,994 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார்.