சுடச்சுட

    

    கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 62,225 ஆக குறைப்பு 

    By DIN  |   Published on : 14th August 2019 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cauvery-20


    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62,225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

    கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகளவு 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு இருந்து வந்தது. 

    இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62 ஆயிரத்து 225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

    கபினி அணையிலிருந்து 32,708 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 29,517 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai