மோடியின் சுதந்திர தின 3 முக்கிய அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும்: ப.சிதம்பரம் திடீர் வரவேற்பு 

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின விழா உரையின் மூன்று முக்கிய அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும் என முன்னாள் மத்திய
மோடியின் சுதந்திர தின 3 முக்கிய அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும்: ப.சிதம்பரம் திடீர் வரவேற்பு 


பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின விழா உரையின் மூன்று முக்கிய அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில், முப்படைத் தளபதி பதவி, ஒரே தேசம் - ஒரே தேர்தல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரையாற்றி மோடி, சிறிய குடும்பமே தேசபக்தி, செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என பேசியிருந்தார்.  

இந்நிலையில், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளை எதிர்த்தும், விமர்சித்தும் பேசி வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடியின் சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையின் 3 அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனடு ட்விட்டர் பக்க பதிவில், சிறிய குடும்பமே தேசபக்தி, செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அந்த மூன்று அம்சங்களை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வருமானத்தை உருவாக்குபவர்களுக்கு மரியாதை என்பதில், நிதி அமைச்சர் மற்றும் வரி அலுவலகம் மற்றும் விசாரணை அதிகாரிகளின் செவியில் சத்தமாகவும், தெளிவாகவும் ஒளித்திருக்கும் என்று நம்புகிறேன். 

இந்த மூன்று அறிவுரைகளில், மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற இரண்டு அறிவிப்புகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதனை கடைநிலை அளவிற்கு எடுத்துச் சென்று மக்கள் இயக்கமாக மாற்றக்கூடிய நூற்றுக்கணக்கான தனியார் தன்னார்வ அமைப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com