அத்திவரதர் தரிசனத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக இயக்கப்பட்ட 6 சிறப்பு மின்சார ரயில்கள் சேவை நாளை
அத்திவரதர் தரிசனத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து


சென்னை: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக இயக்கப்பட்ட 6 சிறப்பு மின்சார ரயில்கள் சேவை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக ஜூலை 6-ஆம் தேதி முதல் 6 சிறப்பு மின்சார  ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 

முதல் சிறப்பு மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரத்தை  சென்றடைந்தது. இரண்டாவது சிறப்பு மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரத்தை அடைந்தது. மூன்றாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரத்தை  சென்றடைந்தது. நான்காவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு காஞ்சிபுரத்தை அடைந்தது. ஐந்தாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடைந்தது. ஆறாவது சிறப்பு மின்சார  ரயில், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடைந்தது. 

அதேபோல, மறுமார்க்கமாக காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. முதலாவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு செங்கல்பட்டையும், இரண்டாவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு செங்கல்பட்டையும். மூன்றாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு செங்கல்பட்டையும், நான்காவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு செங்கல்பட்டையும், ஐந்தாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தை வந்ததடைந்தது. ஆறாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைந்தது. 

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்துக்காக கடந்த 48 நாட்களாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதிதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக கடந்த 48 நாட்களாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் ரத்து செய்யப்படுகிறது. அந்தவகையில் தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சீபுரம் இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com