கார் தொழிலாளர்களை விரைந்து மத்திய அரசு காக்க வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன் 

ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக வந்துள்ள செய்தியை குறிப்பிட்டு, மத்திய அரசு


சென்னை: ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக வந்துள்ள செய்தியை குறிப்பிட்டு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி பணியாளர்களை வேலையை இழக்கும் அபாயத்தை தடுக்க வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருப்பது, வாகனங்களுக்கான விலை உயர்வு, அதிகப்படியான சுங்கக்கட்டணம், வாடகைக்கார்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களாலும், இந்தியாவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. 

விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வாகன உற்பத்தியை குறைந்துக்கொண்டுள்ளன. இதனால் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்துள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிப்பைக் குறைத்துக்கொள்வது, பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது மற்றும் பணியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. வெல்டிங், வார்ப்பு, உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கடும் நெருக்கடியில் தவித்து வருகின்றன. 

உற்பத்தி செய்த வாகனங்கள் தேங்கியதால் அவற்றை வாங்கி விற்பனை செய்யம் டீலர்ஷிப் நிறுவனங்களை கடுமையாக பாதித்தன. இதனால் நிறைய வாகன விற்பனை ஷோரும்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுவரும் கடும் வீழ்ச்சி காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதேபோக்கு இன்னும் 3, 4 மாதங்கள் நீடித்தால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வேலை இழக்கும் ஏபாயம் ஏற்படும் என வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து மத்திய அரசு இந்த விஷயத்தில தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து பெரிய அளவில் கோரிக்கைகள் வரத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்க பதிவில், இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை வீழ்ச்சியால்அடுத்த காலாண்டில் வாகனத் தொழில் உற்பத்தியில் 5 லட்சம் பேர் வேலை இழக்கக்கூடும். இதுவொரு எச்சரிக்கை மணி, தமிழகம் ஆட்டோ மொபைல் துறை சார்ந்து இயங்குகிறது. மத்திய அரசு போதிய நிதி மற்றும் பிற சலுகைகளை அறவித்து அவர்களின் வேலையை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com