சுடச்சுட

  

  ராஜீவ் காந்தி 75-வது பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

  By DIN  |   Published on : 20th August 2019 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sonia


  புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அங்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

  இதனிடையே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai