இந்திய பொருளாதாரத்தில் தேக்கம் நிலவுவது உண்மை: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் கருத்து

இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஷாமிகா ரவி கூறியுள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் தேக்கம் நிலவுவது உண்மை: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் கருத்து

புதுதில்லி: இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஷாமிகா ரவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்க பதிவில், இந்திய பொருளாதார கட்டமைப்பு மந்தநிலையை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். தற்போதைய தேக்க நிலையை சமாளிக்க, அனைத்து அமைச்சகங்களுக்கும் இலக்கு நிர்ணயித்து தேசிய அளவிலான வளர்ச்சி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் பெரிய சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சியை நிதியமைச்சகத்திடம் மட்டும் விடுவது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கு துறையின் கையில் கொடுப்பதைப் போல உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய மாநிலங்களில் வேலையின்மை அதிகரித்துள்ள உண்மை. குஜராத்தில் வேலையின்மை 0.9 சதவீதம், கேரளாவில் 12.5 சதவீதம். வணிகச் சூழலை மேம்படுத்தும் மாநிலங்களும் வேலைகளை உருவாக்குகின்றன. தொழில்துறையில் கவனம் செலுத்தி அதனை மேம்படுத்தும் மாநிலங்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com