காஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை: ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 5 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு
காஷ்மீரில் இயல்பு நிலை நிலவவில்லை: ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி


புதுதில்லி: காஷ்மீரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 5 ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற முயற்சி எடுக்கலாம் என்ற அச்சத்தில் எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருகிறது. பதிலுக்கு இந்தியாவும் தனது எல்லையில் வீரர்களைக் குவித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் பேரழிவு நேரிடலாம் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், பிற கட்சித் தலைவர்கள் சிலரும் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும். ராகுல் காந்தி பொறுப்பான தலைவர். அவர் இதுபோல பேசியிருக்கக் கூடாது.
மத கண்ணோட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படவில்லை. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும்தான் அது ரத்து செய்யப்பட்டது என ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகருக்கு செல்ல முடிவு செய்து, ஸ்ரீநகர் விமான நிலையம் வருகை சென்றனர். 

ஆனால், விமான நிலையத்திலேயே எதிர்க்கட்சி தலைவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், மீண்டும் தில்லிக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.  

இந்நிலையில், திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் அழைப்புவிடுத்ததை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் நிலவும் நிலையை நேரில் பார்வையிடுவதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களுடன் அங்கு சென்றோம். ஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிலையத்திற்கு அப்பால் வெளியே செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் அழைத்து சென்ற ஊடக நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவையெல்லாம் வைத்து பார்க்கும்போது காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை என்பது தெளிவாகிறது என்றார்.

நாங்கள் விமான நிலையத்தில் இருந்த காஷ்மீர் பயணிகளிடமிருந்து கேட்ட கதைகள் ஒரு கல் கூட கண்ணீரை வடிக்கும் என குலாம் நபி ஆஸாத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்களை சட்டம் ஒழுங்கு காரணமாக திருப்பி அனுப்பபட்டதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com