ஜேட்லி கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும் அன்பாக பழகும் பண்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் கூடிய பண்பாளர் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லி என தமிழக முதல்வர் எடப்பாடி
ஜேட்லி கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும் அன்பாக பழகும் பண்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி


கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் கூடிய பண்பாளர் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருண் ஜேட்லியின் மறைவு, அவரது குடும்பம் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு மட்டும் இன்றி, இந்திய நாட்டிற்கும் பேரிழப்பாகும். 

மத்திய நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் அருண் ஜேட்லி. அவரது மறைவு தமக்கு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் தருவதாக தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, ஜேட்லி, நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் மக்களின் நன்மை மற்றும் நட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியவர். கொள்கை மறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழக கூடிய பண்பாளரான அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜேட்லியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் நாளை தில்லி செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com