Enable Javscript for better performance
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வோரின் பாஜகவினரின் பட்டியல் வெளியீடு!- Dinamani

சுடச்சுட

    

    தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வோரின் பாஜகவினரின் பட்டியல் வெளியீடு!

    By DIN  |   Published on : 27th August 2019 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilesaisow

     

    சென்னை: தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் தமிழக பாஜகவினரின் பெயர் பட்டியலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

    தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் பாஜகவினருக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு பாஜகவினர் எவ்வித ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளாமல் இருந்தனர். 

    இந்நிலையில், இன்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என தமிழிசை அறிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் விவாதங்களில் கலந்து கொள்வோருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியல் அதன்படி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai