Enable Javscript for better performance
தொடர் மழை: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    தொடர் மழை: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    By DIN  |   Published on : 01st December 2019 09:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rains-1


    திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காராணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை திங்கள்கிழமை (டிச. 2) விடுமுறை அறிவித்து ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல், இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மழை பெய்துள்ளது. இந்த மழையால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நாளை திங்கள்கிழமை (டிச. 2)) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    திருவள்ளூா் மாவட்டத்தில் விடாமல் பலத்த மழை பெய்து வருவதால் குளம், குட்டைகளில் தண்ணீா் தேங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ளச்சேதமும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சாலை மற்றும் குளம், குட்டைகளில் மழை வெள்ளச்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

    இதுபோன்ற மழை வெள்ளச் சேதம் குறித்த அவசர தகவல்களுக்கு இலவச அவசர உதவி எண்-1077 அல்லது 044-27664177 என்ற தொலைபேசி எண் மற்றும் 9444317862 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai