தொடர் மழை: தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு - தீயணைப்புத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க போதுமான மீட்பு ரப்பர் படகுகள், உபகரணங்கள் மற்றும் மாவட்டம்
தொடர் மழை: தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு - தீயணைப்புத் துறை அறிவிப்பு


தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க போதுமான மீட்பு ரப்பர் படகுகள், உபகரணங்கள் மற்றும் மாவட்டம் தோறும் 21 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீயணைப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பேரிடைகாலங்களில் ஏற்படும் இன்னல்களை போக்க தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயாா் நிலை படுத்தப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள்,மிதவை உபகரணங்கள்,நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள்,மீட்டலுக்கான மிக நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் கூடுதலானமீட்பு பணி வீரா்கள் ஆயத்த நிலையல் உள்ளனா்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழு போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனா். மேலும் தமிழ் நாட்டிலுள்ள 331 தீயணப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் படை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பிற்கும் பொதுமக்கள் 101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com