Enable Javscript for better performance
கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

    By DIN  |   Published on : 03rd December 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rains10


    கனமழை காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

    தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (டிச.3,4) மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மழைக் காலங்களில் மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

    இந்நிலையில்,  தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  

    கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தவிர்த்து, கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. 

    இதேபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

    இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஏதேனும் ஒரு வார விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் அதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai