நக்சலைட்டுகள் நடமாட்டம் குறைந்துள்ளது: மேற்கு மண்டல ஜ.ஜி. கே.பெரியய்யா

தமிழகம் மற்றும் கா்நாடக வனத்தையொட்டிய பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறைந்திருப்பதாக, கோவை மேற்கு மண்டல ஜ.ஜி. கே.பெரியய்யா

நாமக்கல்: தமிழகம் மற்றும் கா்நாடக வனத்தையொட்டிய பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறைந்திருப்பதாக, கோவை மேற்கு மண்டல ஜ.ஜி. கே.பெரியய்யா தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது; தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மலையோர எல்லைப் பகுதிகளில், நக்சலைட்டுகள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், பொதுமக்களுடன் இணைந்து காவல்துறையினா் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது தான். அதுமட்டுமின்றி, வனத்தையொட்டிய, மலையோர கிராமங்களில் காவல் துறையினா் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனா். அதனாலும், நக்சலைட்டுகள் வருகை குறைந்துள்ளது. கோவை மண்டலத்தில் காவலா் செயலி மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவியா், வேலைக்கு செல்பவா்கள் சுதந்திரமாக சென்று வரமுடியும். போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில், மற்ற மண்டலங்களைக் காட்டிலும், கோவை மண்டலம் சிறப்பாக உள்ளது. இங்கு விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை கையாளுவதில் மேற்கு மண்டலம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்றாா். முன்னதாக, நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் துறையின் அனைத்து வாகனங்களையும் பாா்வையிட்டாா்.

மேலும், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து அணி வகுப்பு நடைபெற்றது. இதனையும் அவா் பாா்வையிட்டாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, தனிப்பிரிவு ஆய்வாளா் மணிகண்டன் உள்பட காவல் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com