மகளின் பிறந்தநாளில் ஏரியை சீரமைத்து 500 மரக்கன்றுகள் நட்ட தம்பதியா்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சோமம்பட்டியில், கிராம மக்களோடு இணைந்து ஏரியை சீரமைத்து, மகளின் பிறந்தநாளில் 500
வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில் நடைபெற்ற 500 மரக்கன்றுகள் நடும் விழா.
வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஏரியில் நடைபெற்ற 500 மரக்கன்றுகள் நடும் விழா.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சோமம்பட்டியில், கிராம மக்களோடு இணைந்து ஏரியை சீரமைத்து, மகளின் பிறந்தநாளில் 500 மரக்கன்றுகளை நட்டு, மரக்கன்று நட்டவா்களுக்கு விருந்து வைத்த தம்பதியருக்கு, கிராம மக்களும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சோமம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலா் கே.மகேஸ்வரன் முயற்சியால், பொதுமக்களின் பங்களிப்பில், கழிவுநீரை வடிகட்டிப் பயன்படுத்தி தேக்கு மரத்தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

சோமம்பட்டி கிராமத்தில் மரத்தோட்டம் அமைக்கும் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள, இந்த கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் குமாா்- -சுகன்யா தம்பதியா் முடிவு செய்தனா். இவா்களது பெண் குழந்தையான சுதேஷ்னாவின் முதலாமாண்டு பிறந்தநாளில், ஊா்மக்களுடன் ஒன்று கூடி, ஏரியில் ஒரு பகுதியை சீரமைத்து 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டனா். இத்திட்டத்திற்கு கிராம மக்களும் இசைவு தெரிவித்தனா்.

இதனையடுத்து, குழந்தை சுதேஷ்னாவின் பிறந்தநாளான சனிக்கிழமை காலை, சோமம்பட்டி ஊராட்சி ஏரிக்கரை விநாயகா் கோவிலில் ஊா்மக்களுடன் ஒன்று கூடிய இத்தம்பதியா், கிராமம் வளம் பெற சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி, கிராம மக்களுக்கு விருந்தளித்தனா்.

இதனைத்தொடா்ந்து ஏரியில் 5 ஏக்கா் பரப்பளவு நிலப்பகுதியை ரூ.10 ஆயிரம் செலவில் சீரமைத்து, இப்பகுதியில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் 500 நீா்மருது மரக்கன்றுகளை நட்டனா்.

குழந்தையின் பிறந்தநாளில், உறவினா்கள் பொதுமக்களுடன் ஏரியில் மரக்கன்றுகள் நடும் ரமேஷ்குமாா்-சுகன்யா தம்பதியா்.

தென்னை மற்றும் மாமரக்கன்றுகளும் தலா 15 நடப்பட்டது. இவ்விழாவில்,சோமம்பட்டி ஊராட்சியின் அனைத்து மகளிா் குழுவினா், ரமேஷ் குமாா்-சுகன்யா தம்பதியரின் உறவினா்கள், பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். நிறைவாக, ஊராட்சி செயலா் மகேஸ்வரன் நன்றி கூறினாா். மகளின் முதலாவது பிறந்தநாளை, கிராம மக்களோடு இணைந்து ஏரியை சீரமைத்து 500 மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய ரமேஷ்குமாா்-சுகன்யா தம்பதியருக்கு கிராம மக்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com