கோவை டவுன்ஹால் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் 

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கிறிஸ்தவ ஆலயங்கள்
கோவை டவுன்ஹால் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் 


கோவை டவுன்ஹால் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் வெகு விமர்சையாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிறிஸ்தவர்களால் அந்தந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகள் கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் சீரமைக்கப்பட்டு தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கிறிஸ்மஸ் விழா நேற்று இரவு 11.30 மணியளவில் துவங்கியது. அப்போது கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்த கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்தே குழந்தை இயேசுவின் வரலாறு மற்றும் நற்செய்திகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குழந்தை இயேசுவை வழிபட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com