சுடச்சுட

  

  4 நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் யாரை ஏமாற்ற? எச்.ராஜா விமர்சனம்

  By DIN  |   Published on : 14th February 2019 03:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  hraja


  கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு 4 நாட்கள் கழித்து கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் இந்துக்களை ஏமாற்றுவதாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

  கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக முன்னாள் நகர செயலாளரான இவர், திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரிங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார். 

  இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி திருபுவனத்தில் மர்ம கும்பல் படுகொலை செய்யப்பட்டார். 

  இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பக்க பதிவில், "கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

  இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!" எனப் பதிவிட்டிருந்தார்.

  இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம்.

  இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

  திருபுவனத்தில் உள்ள ராமலிங்கம் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எச்.ராஜா, ராமலிங்கம் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போலீஸார் செய்ய தவறும்பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai