சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் லிட்டர் ரூ.72.95 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.69.25 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை


சென்னை: பெட்ரோல் லிட்டர் ரூ.72.95 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.69.25 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.95 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.25 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com