மோடி அரசுக்கு எதிராக தில்லியில் தர்னா போராட்டம்: 2 ரயில்களில் தில்லி புறப்பட்டார் சந்திரபாபு நாயுடு! 

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தர்னா போராட்டம் நடத்துவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று ரயில்
மோடி அரசுக்கு எதிராக தில்லியில் தர்னா போராட்டம்: 2 ரயில்களில் தில்லி புறப்பட்டார் சந்திரபாபு நாயுடு! 


மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தர்னா போராட்டம் நடத்துவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று ரயில் மூலம் தில்லி புறப்பட்டார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்று கூறி பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத்தொடர்ந்து, விரைவில் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் தர்னா போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி நாளை மறுநாள் சந்திரபாபு நாயுடு தலைமையில் தில்லியில் 12 மணி நேரம் தர்ணா போராட்டம் நடக்க உள்ளது. 

அந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக சந்திரபாபு நாயுடு ரயில் மூலம் இன்று தில்லி புறப்பட்டார். அவருடன் அனந்தபுரம் மற்றும் சிகாகுளம் பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்கள் 2 ரயில்களில் புறப்பட்டுள்ளனர். 

இந்த தர்ணா போராட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்களுடன் டெலிகான்ஃபரன்ஸில் உரையாடிய சந்திரபாபு நாயுடு, 'ஆந்திரா வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாளை (பிப்.10) நம் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை வெற்றிப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com